1/26/08

மறந்தா விட்டோம்???


நடந்து முடிந்த தைப்பூசத் திருநாளை பெரும்பாலான தமிழர்கள் பத்துமலையில் கொண்டாடமல்,வேறு முருகன் ஆலயங்களிலும் கொண்டாடி மகிழ்ந்தனர்.எந்த வருடமும் இல்லாமல்,இந்த வருடம்,பத்துமலையில் மக்கள் கூட்டம் பேரளவில் குறைந்தது என்பதுதான் உண்மை!!!

ஆனால்,இந்த சமுதாயத்தின் சாதனைத் தலைவர் என்ற பட்டப் பெயரை,தனக்குத் தானே வழங்கிக் கொண்டு திரிந்துக் கொண்டிருக்கும் ஒருவர்,கூறியிருக்கிறார்,பத்துமலையில் இந்த வருடம் 9,50,000 பேர் வந்தார்களாம்!!!

என்னுடைய ஆங்கில மக்கள் சக்தி பிரிவில் இதை நான் ஏற்கெனவே கூறியிருந்தேன்.

இதை விட மிக நகைச்சுவையான விடயம் என்னவென்றால்,அவர் சொல்லியிருக்கிறார்,மலேசியத் தமிழர்கள் இன்னும் (மஇகா) இவர்களைத்தான் நம்புகின்றார்களாம்,இவர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார்களாம்.(காமெடியா இருக்கப்பா!!)

யாருடைய குறுஞ்செய்திகளும்,போராட்டங்களும் இவர்களையும்,இவர்களின் அடிவருடிகளின்(தேவஸ்தான) நிர்வாகத்தையும் ஒன்றும் செய்து விட முடியாதாம்!!

கடந்த 25 நவம்பர் 2007,அன்று இந்த மாமனிதர்களின் கொடுஞ்செயலால் நமது சமுதாயத்திற்கு ஏற்பட்ட துன்பத்தை நாம் மறந்து விட்டோமாம்!!

எங்களிடம் நன்கொடை,பங்கு பணம் என்று கோடி,கோடியாக எமாற்றி விழுங்கி இன்று சுகபோக வாழ்க்கை வழ்ந்துக் கொண்டிருக்கும் அந்த சிலர்,எங்கள் உடன்பிறவா உறவுகளை மிருகத்தனமான தக்குதலுக்கு உட்படுத்தியதை நாங்கள் மறந்து விட்டோமாம்!!

மலேசியத் தமிழன் என்றால் மரமண்டையன் என நினைத்து விட்டனர் போலும்!!

மடையர்களே,நாங்கள் மானமுள்ள மனிதர்கள்!!!
உங்களை நம்பி ஏமாந்த காலம் போய் விட்டது!!!
நீங்கள் செய்த அட்டூழியங்களை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட போவதில்லை!!!
எங்களின் ஒற்றுமை உங்களின் வயிற்றிலும்,உங்களின் அம்னோ முதாலாளிகளின் வயிற்றிலும் புளியைக் கறைக்கத் தொடங்கி விட்டதோ??

தினம் ஒரு பொய்,தினம் ஒரு புழுகு மூட்டை அவிழ்த்து விடுவதை விட்டு,வரப்போகும் ஓய்வுக்கலத்தில்(பொதுத்தேர்தலுக்கு பிறகு) என்ன செய்வதென்று சிந்தியுங்கள்,அல்லது உங்கள் மீது சாற்றப்படப் போகும் ஊழல் குற்றச்சாட்டுகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருங்கள்!!!

தலைவரே,உங்களின் தோல்வி உறுதி!!!
எங்களின் வெற்றியும் உறுதி!!!
ஏனென்றால்,
மக்கள் சக்தி வெல்லும்!!!

1 comment:

Sathis Kumar said...

சகோதரர் சதீஷ் அவர்களே, தங்களுடைய வலைத்தளத்தைக் கண்டேன்.. அகம் மகிழ்ந்தேன்.. மக்கள் சக்திக்கு ஆதரவாக தமிழில் வலைப்பதிவுடன் துணையாக வந்திருக்கின்றீர்கள். தொடர்ந்து பல அரிய கருத்துக்களை உங்கள் தீந்தமிழால் சமைத்து மக்களுக்கு இனியமுது படையுங்கள்... ஓலைச்சுவடி சார்பாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.. ஓலைச்சுவடியின் இணைய இணைப்பைக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.. வாழ்க மக்கள் சக்தி..! போராட்டம் தொடரும்...!