1/31/08

வெற்றியை நோக்கி நம் பயணம்.......


ஆகக் கடைசியாக எனக்கு கிடைத்த தகவல்.....
நாளை,பிப்ரவரி 1ஆம் தேதி,பிரிட்டனின் டால்ஃபாகர் ஸ்குவேர் எனுமிடத்தில்,முருகேஷ்(ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்) என்பவரும் மேலும் 4 பேரும் இணைந்து உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.அன்றைய தினம்,டவ்னிங் ஸ்ட்ரீட்டில் அமைந்திருக்கும் பிரிட்டன் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பு ஏறக்குறைய 1000 பேர் கூடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் பிரிட்டன் பிரதமர் துறை அதிகாரிகள் ஹிண்ட்ராஃபின் பிரதிநிதிகளை(வேதமூர்த்தி அவர்கள்) சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளனர்.பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களை சஞ்சிக்கூலிகளாக மலாயாவிற்கு கொண்டு வந்த பிரிட்டன்,அதன் விளைவுகளைக் கண்டு இன்று மனம் இறங்கியிருக்கிறது.அவர்களின் பிரதமர் நம்மை சந்திக்க தயார்,ஆனால் தொடர்ந்து 50 வருடங்கள் நம்மை ஒதுக்கி,ஒடுக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவரான பிரதமர் நம்மை சந்திக்க மறுக்கிறார்!!

நமது பயணத்தின் முதல் வெற்றி தொடங்கி விட்டது.
இனிமேல் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்.

மக்கள் சக்தி வெல்லும்!!!

No comments: