1/20/08

பத்துமலை முருகா.....உன் பிள்ளைகளின் போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டியது உன் பொறூப்பு!!!


முருகா....
பத்துமலை முருகா.....

25 நவம்பர்,
உன் சன்னிதானத்தில்,
உன் முன் நடந்தவை எல்லாம் ஞாபகம் உள்ளதா???

இல்லை,
தைப்பூச குஷியில் அனைத்தையும் மறந்து விட்டாயா??

அப்பனே,
தமிழ்க்கடவுளே.......
நீயீன்றி அனுவும் அசையாது என்பார்களே??!!

நீ சொல்லித்தான்,
FRU வாகனமும்,கவசமனிந்த போலிசும்,
உன்னைக் கும்பிடும் தமிழனைத் தாக்கியதா???

புகைக் கொண்டும்,ரசாயன கலவைக் கொண்டும் தமிழன் தாக்கப்பாட்டானே,
அப்பனே,தமிழ் கடவுளே-அவ்வேளையிள்
வேல் கொண்டு உன் பிள்ளைகளை காப்பாற்றியிருக்க வேண்டாமா??

கண்ணீர் புகைப் பட்டதால்,
நீயும் கண்ணை எரிச்சலால் மூடிவிட்டாயா??
அல்லது,
கேடி நடராஜா உனக்கும் லஞ்சம் கொடுத்து வாயடைத்து விட்டானா???

அப்பனே,
உன் வழி வந்த தமிழன்,
உன்னை மட்டுமே நம்பும் தமிழன்,
சொல்கின்றேன் இன்று,

இவ்வள்ளவு நாளும் நாங்கள் பொறுத்து விட்டோம்,
இனி ஒரு நாளும் பொறுக்கோம்,
எங்களுக்கு விடியல் வேண்டும்!!!

பாவிகளை வதம் செய்!!!
எங்களின் குறைகளை தீர்த்து வை!!!

நடராஜா,
எங்கள் பணத்தை எடுத்துதான் உனக்கு திருப்பணி செய்தான்!!!
அதிலும் பாதியை விழுங்கி விட்டான்!!!

சாமிவேலு,
உன் பெயரை வைத்தே வருடா வருடம் அரசாங்க பணத்தை விழுங்குகிறான்!

இனிமேலும்,
நாங்கள் பொறுப்பதாய் இல்லை!!!
இந்த வருடம் பத்துமலையை புறக்கணிக்கிறோம்!!!
நீ கண்டுக் கொள்ளாவிட்டால்,
உன்னையும் புறக்கணிப்போம்!!!

முருகா,
எங்களின் குலத் தெய்வமே,
மண்டியிட்டு வேண்டுகிறோம்,
எங்கள் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்!!!
எங்களின் சிங்கங்களை சீக்கிரம் வெளிக்கொண்டு வா!!!!

முருகன் சக்தியை நம்புகின்றோம்,
உன் சக்தி வெல்லுதோ,இல்லையோ,
மக்க்ள் சக்தி வெல்லும்!!!!

No comments: