1/29/08

மலேசிய அரசாங்கம் தலிபான்களுக்கு சமமானவர்கள் - HCUK




தலிபான்களை போல் நடந்து கொள்கிறது மலேசிய அரசாங்கம்.பாமியன் புத்தர் சிலையை தலிபான்கள் தகர்த்தது போல்தான் மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கையும் இருக்கிறது.இந்த நடவடிக்கையை மென்-தலிபானிஸம் என்றும் வகைப்படுத்தலாம்.
பல நூறு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில்களின் வரலாற்று பின்னணியைக் கூட கருத்தில் கொள்ளாது இடித்துத் தள்ளும் மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது அடைப்படை மனித உரிமை மீறலாகும்.
இந்துக்கள் மட்டுமல்லாமல் மற்ற சிறுபான்மை மதத்தினரையும் அடிப்படை மனித உரிமைகளுக்கு உட்படுத்துகிறது மலேசிய அரசாங்கம்.
கடந்த நவம்பர் மாதம் கோலாலம்பூரின் வீதீகளில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போரடிய ஆயிரக்கணக்கான தமிழர்களை காட்டுத்தனமாக தாக்கியது மலேசிய போலிஸ்.
ஏறக்குறைய இரண்டு மில்லியன் தமிழர்கள் இனவாத மலேசிய அரசாங்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களின் உடனடி தலையீடு அவசியமாகும்.
அனைத்துலக சமூகமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு,சுமுக தீர்வு காணவேண்டும்.

மேல் காணப்படும் செய்தியானது எனது தனிப்பட்ட கருத்து இல்லை.இந்த புகாரை கூறியிருப்பது ஐக்கிய ராச்சிய இந்து பேரவை(The Hindu Council of United Kingdom).கடந்த வெள்ளிக்கிழமை பத்திரைகளுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் அப்பேரவையின் செயலாளர் திரு.அனில் பானோட் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது கருத்தும் இதுதான்!!
பாமியான் புத்தர் சிலையை வரலாற்று சின்னம் என்று கூட பாராமல் வெடி வைத்து தகர்த்த தலிபான்களுக்கும்,பல நூறு கோவில்களையும்,அதற்குள் குடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் சிலைகளையும் உடைத்து தள்ளிய மலேசிய அரசாங்கத்திற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

தலிபான்களின் அட்டகாசம் அடங்கி விட்டது,
மென்-தலிபானிஸத்தை நடைமுறைப்படுத்தும் மலேசிய அரசாங்கத்தின் அட்டகாசமும் கூடிய சீக்கிரத்தில் அடங்கும்.

மக்கள் சக்தி வெல்லும்!!

No comments: