1/20/08

'ஆயுதப் போராட்டமாக மாறும் அபாயத்தில் மலேசியப் போராட்டம்


அமைதி முறையில் மகாத்மா காந்தியின் படங்களை கையில் ஏந்திக் கொண்டு தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்க மலேசிய அரசு மறுத்தால், தமிழர்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால், காந்திப் படங்களுக்குப் பதில் பிரபாகரன் படத்தை ஏந்தத் தமிழர்கள் தயங்க மாட்டார்கள்.

மலேசியத் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரு நாட்டுத் தமிழர்களுமே தங்களது உரிமைகளுக்காகவே போராடி வருகின்றனர்.

மலேசிய அரசின் இனவாத நடவடிக்கைகளால் தமிழர்கள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.இப்போதைக்கு மலேசியத் தமிழர்களிடம் எந்தவித திட்டமும் இல்லை. தங்களது போராட்டத்தை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மலேசிய அரசு தீவிரமாக அமல்படுத்த முயன்றால் நிச்சயம் தமிழர்கள் பதிலடி கொடுப்பார்கள். - மலேசியாவின் கெபாங்சன் பல்கலைக்கழக(UKM) வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் பி.ராமசாமி. (source :http://thatstamil.oneindia.in/news/2007/12/01/world-malayaian-tamils-may-choose-prabhakaran.html)

என்னைக் கேட்டால் பேராசிரியர் பி.ராமசாமி அவர்கள் கூறியிருக்கும் கருத்து 100% சரி என்று கூறுவேன்.

கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி கோலாலம்பூரில் போராட்டத்தின் போது,நான் சந்தித்த நண்பர் ஒருவர் கூறுகையில்,"அமைதி முறையில் மகாத்மா காந்தியின் படங்களை கையில் ஏந்திக் கொண்டு போராட்டம் நடத்தினால் கூட தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் அநியாயம் புரிகின்றார்கள்!!" என்று வெதும்பிய போது, நான் கூறினேன், "மகாத்மா காந்தி போதித்த அன்பு வழி இவர்களுக்கு புரியாது,இவர்களுக்கு பிரபாகரன் வழியில்தான் பதிலடி கொடுக்க வேண்டும்,நாம் மகாத்மா காந்தியின் படங்களை கையில் ஏந்தியிருக்கக் கூடாது,பிரபாகரன் படத்தை ஏந்தியிருக்க வேண்டும்!!" அப்போது அங்கிருந்த பலர்,கைத்தட்டி தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

ஆனாலும் மிகுந்த துணிச்சலுடைய தலைவரான அண்ணன் உதயக்குமாரின் தலைமையிலான நமது போராட்டம் அன்பு,அமைதி வழி போராட்டம் என்பதால் அமைதியாக இருக்கிறோம்,எங்கள் அமைதியை பயம் என நினைக்கவேண்டாம்.எங்களின் போராட்டம்,வெற்றி கனிகளை ஈட்டாமல் ஓயாது!!!

ஆளும் தேசிய முன்னனி அரசாங்கமே,தேசிய முன்னனி அரசாங்கத்தில் அடிமையாக அங்கம் வகிக்கும் மஇகாவே,மஇகாவின் (தரு)தலைவனான சாமிவேலுவே,உங்களின் பொய்களை நம்பி நாங்கள் ஏமாந்த காலம் மலை ஏறிவிட்டது!!!

எங்கள் விரக்தியின் உச்சத்தை நாங்கள் அடைந்த பொழுது எங்கள் தமிழ் கடவுள் முருகனே பார்த்து அனுப்பிவைத்தான் எங்கள் உரிமை சிங்கங்களை!!

போராட்டம் என்று வந்து விட்ட பிறகு,பிரிவுகளும்,சிறை வாசங்களும்,தூற்றல்களும்,கீழறுப்புகளும் இல்லமலா??

ஆனால்,எந்த போராட்டத்திலும் பிரிவுகளும்,சிறை வாசங்களும்,துற்றல்களும் நிரந்தரமல்ல,இவையெல்லாம் வெற்றி வாசலின் முதல் படிகள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது!!

தீயோர்களின் கீழறுப்புகள் உன்னதமான போராட்டத்தை ஒன்றும் செய்து விடாது!!

ஆகவே,எமது போராட்டத்தை ஒடுக்கி விடலாம்,அழித்து விடலாம் என்ற பகற்கனவு பழிக்காது!!

அமைதி போராட்டத்தை ஒடுக்க நினைத்து,ஆயுத போராட்டத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள் என்று மூடர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!!

எமதுரிமையை என்றும் இழக்க மாட்டோம்,சுதந்திரத் தீ எமக்குள் தொடர்ந்து எரியும்!!!

மக்கள் சக்தி வெல்லும்!!!

No comments: