1/23/08

தைப்பூசதிற்கு பொது விடுமுறையாம்........கோலாலம்பூரிலும்,புத்ராஜெயாவிலும் மட்டும்!!!

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிப்பதைப் பற்றி கண்டிப்பாக நான் பரிசீலிப்பேன்!!!
இதுதான் மலேசிய பிரதமரின் பொங்கல் விழா உறையின் முக்கிய சமாச்சாரம்.இந்த அறிவிப்பானது மலேசிய தமிழர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.மலேசியத் திருநாடு எஙகும் பெரும் விமரிசையாகக் கொண்டாடப் படும் தைப்பூசத் திருநாளுக்கு தேசிய பொது விடுமுறை என்பது புத்தாண்டின் மிகச் சிறந்த பரிசாக அமைந்திருக்கும்.ஆனால்,கிடைத்ததோ தேசிய பொது விடுமுறை அல்ல!!!!

தைப்பூச விடுமுறை,கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூருக்கும்,புத்ரா ஜெயாவுக்கும் மட்டும்தான்!!!

அதற்கு பிரதமர் கொடுத்திருந்த காரணம்,மிகச் சிறந்த காரணம் எனக் கூறலாம்.தைப்பூச தினத்தன்று மாநகரின் சாலைகள் எல்லாம் மிக நெரிசலாக உள்ளதாம்,அதனால் தைப்பூச விடுமுறை என்பது அவசியமாம்.அது சரி,கோலாலம்பூரில் சாலைகள் எல்லாம் நெரிசலாகி விடுகின்றது,புத்ரா ஜெயாவிலும் நெரிசல் மிக மோசமோ???அல்லது புத்ரா ஜெயாவில் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்களா??அல்லது புத்ரா ஜெயாவில் ஏதாவது முருகன் கோவில் உள்ளதா??அல்லது புத்ரா ஜெயாவில் தைப்பூசம் என்பது மிகப் பெரிய விழவா???

அப்பொழுது கெடா,பெர்லிசு,மலாக்கா,பஹாங்,கிளாந்தான்,திரங்கானு,சபா,மற்றும் சரவாக்கில் எல்லம் தமிழர்கள் இல்லையா???

அங்குள்ளவர்கள் எல்லாம் மலேசியர்கள் அல்லவோ???

ஒரு வேளை தேசிய முன்னனி அரசாங்கத்திற்கு அங்குள்ளவர்கள் தமிழர்கள் என்பது மறந்து விட்டதோ???

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை என்று சாமிவேலு என்ற மாமேதையின் ஆலோசனையின் பேரில்,ஆளும் தேசிய முன்னனி இனவாத அரசு,இந்த கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது!!!

சாமிவேலுவை நம்பி நாங்கள் ஏமாந்த காலம் போயே,போய் விட்டது என்பதை மாண்புமிகு பிரதமர் இன்னும் உணரவில்லைப் போளூம்!!!

எங்கள் சிங்கங்கள் எங்களை கடந்த 25 நவம்பர் அன்றே எழுப்பி விட்டு விட்டார்கள்,இனியும் நாங்கள் ஏமாற போவதில்லை!!

மக்கள் சக்தி வெல்லும்!!!

No comments: