நண்பர்களே,
எதிர்வரும் 16-02-2008 அன்று நாம் மீண்டும் படையெடுக்கப் போகின்றோம்.
ஆம்,படைதான் எடுக்கப்போகின்றோம்.
நாம் இப்பொழுது நடத்திக் கொண்டிருப்பது உரிமைக்கான அகிம்சைப் போர்;ஆகையால் நமது இரண்டாம் பேரணியை இரண்டாம் படையெடுப்பென்பது எந்த வகையிலும் தவறாகாது!!!
இந்த முறை நமது பேரணியின் கருப்பொருள்,அன்பர் தினம் என்பதாகும்!!
இந்த அன்பர் தின பேரணியின் முக்கிய நோக்கமே,இந்த மலையகத்தின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதுதான்!!
நம்மை தீவிரவாதிகள் என்றும்,தேசத்துரோகிகள் என்றும் பழிப்பேசிய மூடர்களுக்கு நமது தேசப்பற்றை உணர்த்துவோம்.
இம்முறை பேரணிக்கு நாம் கொண்டு வர வேண்டியவை சிவப்பு நிற ரோஜாவும்,மஞ்சள் நிற ரோஜாவும் ஆகும்.
சிவப்பு நிற ரோஜாவானது இந்த தேசத்தின் மீது நாம் வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்பாடாகும்.மஞ்சள் நிற ரோஜாவானது நமது 5 சிங்கங்களை விரைவில் வெளியேற்றுமாறு கோரிக்கையை வலியுறுத்துவதாகும்.
ஆகவே,தோழர்களே,மீண்டும் ஒரு முறை தலைநகரில் கூடி நமது ஒற்றுமையை மீண்டும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,நமக்காக போராடி இன்று சிறைச்சாலையிலும்,மருத்துவமனையிலும் வாடிக்கொண்டிருக்கும் அந்த 5 உன்னத மனிதர்களுக்கு நமது தார்மீக ஆதரவையும் புலப்படுத்துவோமாக!!
மக்கள் சக்தி வெல்லும்!!
No comments:
Post a Comment